பக்கத்து வீட்டில் ஒரே சத்தம்!!உடனே, அருணா " என்னங்க, இப்போ கொஞ்ச நாளா இப்படித் தான் அடிக்கடி சண்டையும் கூச்சலுமா இருக்கு,அந்த பொண்ணு வீணா யாரையோ காதலிக்கிறா போல.அவ கல்யாண பேச்சு ஆரம்பிச்சதிலிருந்து இதே மாதிரி தான் பிரச்சனை அவங்க வீட்ல.எல்லாரும் நம்ம பொண்ணு லேகா போல இருப்பாங்களா!நல்ல பொண்ணு நம்ம சொன்னதை படிக்கிறா ,நாளைக்கு நம்ம சொன்ன பையனைத் தான் கட்டுவா, குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு.என்ன சொல்றீங்க!! என்றாள்.
உடனே,அவள் கணவன் ஆறுமுகமும், ஆமா டீ , நம்ம லேகா பத்தர மாத்துத் தங்கம்.நம்ம வளர்ப்பு இல்ல பின்ன எப்படி!!நாம தேர்ந்தெடுக்கற வாழக்கையைத் தான் அவ வாழுவா!!.பாவம் அந்த பரமசிவம்,அவன் பொண்ணு வீணானால அவனுக்கு எப்போவுமே நிம்மதி இல்ல.
அப்போது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்க ,ஆறுமுகம், கதவை திறந்தான்.அங்கே பக்கத்து வீட்டு பரமசிவம் நின்று கொண்டு இருந்தான்.அவனை ஏளனமாக பார்த்துக்கொண்டு இருந்த ஆறுமுகத்திடம் ,உள்ளே வரலாமா? என்றான் பரமசிவம்.
ஹ்ம் !! வாங்க வாங்க என்று முகம் சுளித்து வரவேற்றான் ஆறுமுகம்.!
இங்க பாருங்க ஆறுமுகம்,நான் ஒண்ணு சொல்லணும் உங்க கிட்ட.ஒரு அஞ்சு நிமிஷம் பேசணும், கொஞ்சம் பொறுமையா கேளுங்க.
நம்ம பசங்க வாழ்க்கையை அவங்களுக்கு பிடிச்ச மாதிரி அமைச்சு கொடுக்க வேண்டியது நம்ம கடமை.நாம வாழணும்னு நினைச்ச வாழ்க்கையை அவங்கள வாழச் சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது.
உங்க பொண்ணு லேகா இது வரைக்கும், எல்லா விஷயத்துலயும் நீங்க சொல்ற மாதிரி தான் நடந்துருக்கா.ஆனா இப்போ நீங்க அவ கல்யாண விஷயத்துலயும் உங்களுக்கு பிடிச்ச ஒரு மாப்பிள்ளையைத் தான் கல்யாணம் செய்யணும் அப்படின்னு வற்புருத்துறீங்க.
ஆனா அவ வேறு ஒரு பையனை விரும்புறா!அவனைத் தான் கல்யாணம் செய்யணும்னு ஆசை படுறா.பாவம் உங்க கிட்ட அதை எப்படி சொல்லுவா?!உங்க விருப்பத்துக்கு மாறா அவ இது வரைக்கும் நடந்ததுஇல்ல, நீங்க நடக்கவும் விட்டதில்லை.அதனால அவளுக்கு உங்க கிட்ட சொல்ல பயம்.சின்ன வயசுல இருந்து என் பொண்ணு மாதிரி பழகினதால, என் கிட்ட இந்த விஷயத்தை சொன்னா.
என் மனைவியும் பொண்ணும் இந்த விஷயத்துல என்னை தலையிட வேண்டாம் அப்படின்னு சொல்லிகிட்டே இருக்காங்க.
இதனால எங்களுக்குள் சண்டை கூட வருது.இப்போ கூட இது தான் பிரச்சினை.ஆனா என்னால ஒரு பொண்ணு வாழக்கை வீணா போறதை பார்த்துட்டு சும்மா இருக்க முடியலை.அதான் இன்னைக்கு என்ன ஆனாலும் சரி உங்க கிட்ட சொல்லிடணும்னு வந்தேன்.
என் பொண்ணு கிட்ட கூட அவ யாரையாவது விரும்பராளா அப்படின்னு கேட்ட பிறகு தான் மாப்பிள்ளை பார்க்கவே ஆரம்பிச்சேன்.அதனால நீங்க இந்த விஷயத்துல கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்க.நான் விசாரிச்ச வரைக்கும் அந்த பையன் நல்லவன்,நல்ல வேலையில இருக்கான்.நீங்களும் உங்க பொண்ணு கூட உக்கார்ந்து பேசி ஒரு நல்ல முடிவு எடுங்க.அவ்வளவு தான்.தயவு செஞ்சு அவள திட்டாதீங்க.சரி நான் வரேன், உங்க பொண்ணு வர நேரம் ஆகிடுச்சு என்று சென்றான்.
இதை கேட்ட ஆறுமுகமும் , அருணாவும் இது தான் வாழ்க்கையா!! என்று தலை குனிந்து தன் மகளின் விருப்பத்தை நிறைவேற்ற என்ன செய்யலாம் என்று யோசிக்கத்தொடங்கினர்.
adei, giving subtle signals ah?
ReplyDeleteheheeeee!!! illa da apdi ellam illa...yaavum karpanaiyae!!
ReplyDelete