பொறுப்பு
"ராதிகா!!!!!!!! சீக்கிரம் இங்க வாயேன்....நிலைமை ரொம்ப மோசமா இருக்கு"
"என்னங்க.....என்ன ஆச்சு" என்று பதறி ஓடி வந்தாள் ராதிகா...
"இங்க பாரேன் இந்த ஜெர்மனி நாலு கோல் போட்டாச்சு....இங்கிலாந்து ஒண்ணு தான்..அதுவும் 88 மினுட்ஸ் ஆகிடுச்சு...ச்ச....ஹாகிம் இல்லைனா டீம் அவ்ளோ தான்"....என்று முன்தினம் நடந்து முடிந்த .:பிபா போட்டியின் மறுஒளிபரப்பை பார்த்து புலம்பிக்கொண்டிருந்தான் முகேஷ்...
"ஐயோ... என்னங்க இது....நேத்து நடந்த விளையாட்டு ...இப்போ அதுவும் ஏதோ பெருசா நடந்த மாதிரி பேசுறீங்க.......நம்ம வீட்ல எவ்வளோ பிரச்சனைகள் இருக்கு.....நம்ம பொண்ணுக்கு நாளைக்குள்ள செக்அப் பண்ணி என்ன ஜுரம்னு பார்க்கணும்...மூணு நாளா பாவம் அவ அனுபவிக்கற கஷ்டத்தை என்னால பார்க்கவே முடியல...ஒரு அப்பாவா நீங்க யோசிக்காம, .:புட்பால் அதுவும் நம்ம நாடு விளையாடல....அது மட்டும் இல்ல முடிஞ்சு போனது வேற, அதை பத்தி நம்மள்ள யாருக்கோ ஏதோ நடந்த மாதிரி பேசிகிட்டு இருக்கீங்க"... என்று கொட்டி தீர்த்தாள் ராதிகா...
"ஹே உனக்கு .:புட்பால் பத்தி என்ன தெரியும்...ஜெர்மனி-இங்கிலாந்து மாட்ச்செல்லாம் மூணாவது உலகப்போர் மாதிரி...ஹாகிம் எல்லாம் எவ்வளோ பெரிய பிளேயர் தெரியுமா....அவரெல்லாம் நாட்டுக்காக என்னமா விளையாடுவார்....அவர் தன் வாழ்நாள்ல பாதி நேரம் விளையாட்டுக்கே செலவழிச்சிருபார்.அவர் குடும்பமெல்லாம் என்ன ஆச்சு...உருப்படலையா ...நம்ம பொண்ணுக்கு ஜுரம்....மூணு நாளா...டாக்டர் தான் பார்க்கலாம்னு சொல்லிர்காரு இல்ல..அப்புறம் என்ன..குடி முழுகிட்ட மாதிரி பேசுற...பெருசா"... என்று தன்னை நியாயப்படுத்தினான் முகேஷ்...
"ம்ம் அப்படியா...இங்கே வாங்க...இந்த முறை ஹாகிம் ஏன் விளையாடலைன்னு தெரியுமா"..
"ஏன்....அவருக்கு உடம்பு சரியா இருக்காது இல்ல எதாவது அடி பட்டிருக்கும் ..வேற என்ன....ஹாஆஆஅ"..
"ஐயோ ஏங்க இப்படி ஒன்னுமே தெரியாம இருக்கீங்க...அவரே நியூஸ் கொடுத்திருக்காரு பாருங்க நல்லா....அவரோட பொண்ணுக்கு ரொம்ப முடியலயாம்.ஆஸ்பத்திரில சேர்த்திருக்காங்களாம்....அதுனால அவர் அங்க இருக்காரு...நாடு முக்கியம்,விளையாட்டு முக்கியம்,,,ஆனா என் பொண்ணு உடல் நலமும் முக்கியம்...என் குழுவும் ,ரசிகர்களும் அதை புரிஞ்சுபாங்க...அப்படின்னு அவர் எவ்வளோ பொறுப்பா சொல்லிருக்கார் பார்த்தீங்களா...நீங்கல்லாம் அவரோட விசிறியாம் ..போங்க போங்க..போய் குளிச்சுட்டு கெளம்பற வழிய பாருங்க" ...என்றாள் ராதிகா....
ராதிகா சொன்ன இந்த விஷயம் முகேஷுக்கு சுரீர் என்று முகத்தில் அறைந்தார் போல் இருந்தது...தன் பொறுப்பை உணர்ந்து ஆஸ்பத்திரிக்கு போக தயாரானான்.
---.அஜய்.கோ
எதிர்காலம்
"வாராயோ வாராயோ காதல் கொள்ள"என கைபேசி மணி ஒலிக்க,தன் கணவன் முருகனின் அழைப்புக்காக காத்திருந்த மீனா,.:போனை எடுத்து பேசத்தொடங்கினாள்,......அஜய்.கோ
"ஹலோ என்னங்க....
மீனா நான்தான்...
தெரியும் சொன்ன மாதிரி கரெக்டா சொன்ன நேரத்துக்கு கால் பண்ணிடீங்க...கெளம்பியாச்சா... வீட்டுக்கு.....அர்ஜுனும் ரெடி ,நானும் ரெடி....நீங்க வந்தா வெளியே கெளம்ப வேண்டியது தான்.
மீனா அது வந்து...இன்னிக்கும் ....
என்னங்க இன்னிக்கும்னு இழுக்கிறீங்க...?!?!?.....வருவீங்களா......
இல்ல... அது வர முடியாது மா....சாரி....சாரி......அத சொல்லத்தான் .:போன் பண்ணினேன்....
அய்யோஓஓஓஓ...என்னனங்க இது....இன்னிக்குமா.....ஒரு வாரமா இப்படி தான் பண்ணிட்டு இருகீங்க.நானும் சரி சரின்னு பார்த்தா....இப்போ இப்படி சொல்லறீங்க...காலைல கண்டிப்பா வரேன்னு சொன்னீங்களே......இப்போ என்ன ஆச்சு.....
இல்ல மீனா புரிஞ்சுக்க...நான் என்ன வேணும்னா வராம இருக்கேன்...காலைல மேனேஜர் கிட்ட பெர்மிசன் கேட்டபோ ஓகே தான் சொன்னார்...ஆனா நாலரை மணிக்குத்தான் புது டிசைன் வொர்க் வந்தது,அதுவும் இன்னைக்கு இராத்திரி குள்ள முடிச்சு அனுப்பணுமாம் ....டெட் லைன் வேற கொடுத்துட்டாங்க ....என்ன செய்ய..."
என்று தன் நிலையை எடுத்து சொன்னான் முருகன்,மீனாவின் கணவன்.
"ஏங்க உங்களுக்கு ஆபீஸ் ஆபீஸ் ஆபீஸ் தானா.....நான் ,நம்ம பிள்ளை அர்ஜுன் நினைப்பே கிடையாதா???பாவம் அர்ஜுன்,ஒரு வாரமா எப்போ பீச்க்கு போகலாம்னு காத்துக்கிட்டு இருக்கான்....அப்பா, அம்மாவோட வெளியே போகனும்னு அந்த குழந்தைக்கு தோணாதா?வார கடைசிலயும் ப்ரோஜெக்ட்னு போயிடுறீங்க....நாம குடும்பமா , ஜாலியா,வெளியே போய் ரொம்ப நாள் ஆகிடுச்சு....யோசிச்சு பாருங்க......
அர்ஜுன் மனச கொஞ்சம் புரிஞ்சுகோங்க..என்ன விடுங்க எனக்கு இது பழகிடுச்சு...ஆனா அந்த பிஞ்சு மனசு பாவம் இல்லையா...போகலாம் போகலாம்னு சொல்லிட்டு போகாமலே இருந்தா அவன் என்ன ஆவான்...."
தன் மனைவி பேசுவதை முழுதாய் கேட்டு பின் முருகன் தொடங்கினான்...
"மீனா நீ சொல்லுறது ரொம்ப சரி.நம்ம பிள்ளை அர்ஜுன் பாவம் தான்...நல்ல பிள்ளை அவன வெளியே கூட்டிட்டு போக முடியலேயேன்னு எனக்கும் வருத்தம் தான்....ஆனா ஒன்னு புரிஞ்சுக்க....இன்னிக்கு பீச்க்கு போகணும் , பார்க்குக்கு போகணும் ,படத்துக்கு போகணும் இப்படி அர்ஜுன் கேட்பான்...வளர்ந்ததுக்கு அப்புறம் , டாக்டர் ஆகணும், என்ஜீனியர் ஆகணும்,பைலட் ஆகணும்னு கேட்பான்...அப்பவும் நாம தான் அதை செய்யனும்...இந்த சின்ன சின்ன அசைகள என்னைக்கு வேணா நிறைவேத்தலாம்.நாளைக்கு எனக்கு அதிகம் வேலை இல்லைன்னா நாம போகலாம்....ஆனா பெரிய பெரிய லட்சியங்களையும் நாம தான் நிறைவேத்தனும் ..அதுக்கு வேலை தான் முக்கியம்...இப்போ நான் சண்டை போட்டு எங்க மேனேஜர் கிட்ட அனுமதி வாங்கலாம்.ஆனா நம்ம குழந்தையோட எதிர்காலம் தான் எனக்கு பெருசா படுது....புரிஞ்சுக்கோ....நீ தான் அவனுக்கு சமாதானம் சொல்லணும். .:குடும்பம் முக்கியம்...அதுக்கு தான் நான் சம்பாதிக்கிறேன்..ஆனா அவங்க நல்லா இருக்கறதும் ,அவங்க எதிர்காலமும் ரொம்ப முக்கியம்...அதனால நீ இனிமே இப்படி யோசிச்சு பேசாதே...சரியா"
....என்று முடித்தான் ஒரு நல்ல கணவன்,நல்ல தந்தை முருகன்.
முருகனின் பேச்சில் இருந்த உண்மையை புரிந்து கொண்டு, தன் அறியாமையை நினைத்து தன் தலையில் அடித்து கொண்டு சிரித்த முகத்துடன், சரிங்க...பை..வேலை முடிச்சுட்டு சீக்கிரம் வாங்க...என்று .:போனை வைத்தாள் மீனா...
---.அஜய்.கோ
