பள்ளியிலிருந்து வந்த ராகவ், அப்பா எங்கே என்று கேட்டான்.
"அப்பா இப்போ தான் டா வேலையிலிருந்து வந்தார்.அவர் கட்டில்ல தான் உக்கார்ந்துட்டு இருக்கார்.என்ன விஷயம் கண்ணா!" என்றாள் பவித்ரா,ராகவின் அம்மா.
"இல்லம்மா அப்பாகிட்டே ஒண்ணு கேட்கனும் நான் அவர் கிட்டயே அதை கேட்டுக்கறேன்" என்றான் ராகவ்.
"ஹே நில்லு டா அப்பா இன்னும் முகம் கூட கழுவல..ராகவ் குட்டி நில்லு!!" என்று தன் ஆறு வயது மகனை நிறுத்த முற்பட, அதற்குள் அடுப்பில் ஏதோ சத்தம் கேட்க,"என்னவோ பண்ணு டா" என்றபடியே சமயலறைக்குச் சென்றாள்.
ராகவ் கட்டிலில் இருந்த அப்பாவிடம், "அப்பா அப்பா!
எனக்கு ஒரு சந்தேகம்!!!"
ஏதோ யோசனையில் இருந்த அப்பாவிடமிருந்து எதுவும் பதில் வரவில்லை.
மீண்டும் "அப்பா அப்பா இங்க பாருங்களேன்.எனக்கு ஒரு சின்ன சந்தேகம் பா".. என்றான் ராகவ்.
"என்னடா! இப்போ ஒன்னும் சொல்ல முடியாது ,அப்பா கோபமா இருக்கேன் போய்டு இல்லைனா அடி தான்" என்று தன் அலுவலகத்தில் காட்ட முடியாத கோபத்தை இந்த பிஞ்சு குழந்தையிடம் காட்டினார் ராகவின் அப்பா.
ராகவ் கண் கலங்கிய படியே அம்மாவை நோக்கிச் சென்றான்.
இதற்குள் வெளியே சென்றீருந்த ராகவின் தாத்தா களைத்த முகத்துடன் வீட்டிற்க்குள் வந்தார்.
ராகவின் அப்பா தன் அப்பா வந்ததை பார்த்து, "அப்பா அப்பா கொஞ்சம் நில்லுங்களேன்!" என்றார்.
அவரும் "என்னடா சொல்லுடா..ஏன் இந்த அவசரம்.என்ன விஷயம் சொல்லு பொறுமையா" என்றார். ராகவின் அப்பாவும் தன் தந்தையிடம் தன் சந்தேகங்களை கேட்க, அவரும் பொறுமையாக அதற்கு பதில் அளித்தார்.ஒரு பத்து நிமிட பேச்சிற்கு பிறகு ராகவின் தாத்தா " மருமகளே கொஞ்சம் காபி கொடும்மா" என்று உள்ளே சென்றார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பவித்ரா, சமையல் அறையிலிருந்து வெளியே வந்தாள் ராகவுடன்."மாமா இங்க பார்த்தீங்களா உங்க மகன் செஞ்சதை.அவர், நீங்கள் வந்ததும் வராததுமாக ஏதோ கேட்க நீங்கள் எவ்வளவு பொறுமையாக பதில் சொன்னீங்க. அனால் அவர் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் ஏதோ கேட்க நினைத்த ராகவிடம் எரிந்து விழுந்திருக்கிறார். பாவம் அந்த குழந்தை மனசு எப்படி இருந்திருக்கும்.உங்க மகனுக்கு கொஞ்சம் எடுத்து சொல்லுங்க மாமா" என்றாள்.முகம் குனிந்து நின்றிருந்த தன் மகனை பார்த்து என்னடா இது! என்று பார்வையாலேயே கேட்டு விட்டு சென்றார் ராகவின் தாத்தா.
தன் தவறை உணர்ந்த ராகவின் அப்பா ,தன் மகனிடம் "இங்க வா ராகவ் குட்டி அப்பா கிட்ட வா டா" என்று கூறிய படி சென்றான்.
No comments:
Post a Comment