காலை பத்து மணி; "இன்னும் கண்ணம்மா வரலையா!!!??,எங்க போனா அவ!ஆயிரம் வேலை இருக்கு வீட்ல இன்னைக்கு.இவ எப்போ வந்து எப்போ வேலைய முடிச்சு, ஹ்ம்ம் !!!!! ஊர்ல இருந்து அவங்க எல்லாம் வரத்துக்குள்ள இங்க எல்லாம் தயாரா இருக்க வேண்டாமா?கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!நம்ம வேலை செய்யற வீடாச்சே, நம்ம வரலைன்னா என்ன ஆகும்னு கொஞ்சம் கூட யோசிக்கிறது இல்ல.சே.!!!!"என்று புலம்பிக்கொண்டிருந்தாள் சாரா!!
சட்டென்று திரும்பிப்பார்க்க , அங்கே அவள் வீட்டு வேலைக்காரம்மா கண்ணம்மா நின்று கொண்டிருந்தாள் தலை குனிந்த படி.
"அம்மா, வீட்ல சின்ன பிரச்சனைம்மா, என் பொண்ணுக்கு இன்னைக்கு ஸ்கூல்ல பணம் கட்ட கடைசி நாள் மா.என் கிட்ட அவளோ பணம் இல்ல.நீங்களும் அடுத்த வாரம் தான் தர முடியும்னு சொல்லிடீங்க.அதன் அந்த டீச்சர் கிட்ட போய் இன்னும் கொஞ்ச நாள் அவகாசம் கேட்க போனேன்.இல்லைனா என் பொண்ணு படிப்பு அவளோ தான் மா.பாவம் நல்லா படிக்குது இப்போ.மன்னிச்சிருங்க மா.இதோ அரை மணி நேரத்துல எல்லா வேலையையும் முடிச்சிடறேன்." என்று அப்பாவித்தனமாக பேசினாள் கண்ணம்மா.
"ஹ்ம்ம் எப்போவும் ஏதாவது காரணம் வெச்சிருப்பயே .புதுசு புதுசா சொல்லு.வேலை எவ்வளவு முக்கியம்னு உனக்கு தெரியலை.இந்த வேலை இல்லைன்னா நீ என்ன செய்ய முடியும்.அந்த எண்ணமே கிடையாது.எப்போவும் ஏதாவது ஒரு பிரச்சனைனு ஒண்ணு வர மாட்ட , இல்ல தாமதமா வருவ.அதுவும் எனக்கு ரொம்ப முக்கியமான நாள்ல.பணம் மட்டும் சரியா முதல் தேதி கொடுத்துடனும்.என்ன செய்ய எனக்கு வேற வழி இல்ல.சரி சீக்கிரம் ஆகட்டும்" என்று வேலையின் முக்கியத்துவத்தை பற்றி ஒரு சிற்றுரை ஆற்றி விட்டு,தன் அலுவலக மேலாளரை தொலைபெசியில் அழைத்தாள் சாரா.
"சார்! நான் தான் சாரா,மன்னிச்சிருங்க சார், இன்னைக்கு மட்டும் என்னால வேலைக்கு வர முடியாது.ஒரு சின்ன பிரச்சன்னை வீட்ல.எங்க அம்மா அப்பா எல்லாம் கூட ஊர்ல இருந்து வராங்க.நான் தான் இங்க எல்லாத்தையும் பார்த்துக்கணும்.இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான் சார்.இனிமே ஒழுங்கா வந்துடறேன்" என்று கெஞ்சலாகப் பேசினாள்.
எதிர் முனையில்,"என்ன மா இது!! இந்த மாசத்துல இது மூணாவது முறை நீ இப்படி அனுமதி கேக்குற.வேலை பத்தி கொஞ்சம் கூட கவலை இல்லை.சம்பளம் மட்டும் நிறைய கொடுக்கணும்.ஆனா வேலை மட்டும் ஒழுங்கா செய்ய மாட்டீங்க.ரொம்ப மோசம். உன்னை நம்பி ஒரு பொறுப்பு இருக்கேன்னு துளி கூட கவலை இல்லை.சரி இது தான் கடைசி.என்னவோ பண்ணுங்க".என்று அழைப்பை துண்டித்தார் மேலாளர்.
"அப்பா!! எப்படியோ இந்த ஆளு கிட்ட அனுமதி வாங்கியாச்சு.வேலையாம் வேலை பெரிய வேலை.கொடுக்கிற சம்பளத்துக்கு இதுவே ஜாஸ்தி.வீட்டை பத்தி நினைப்பே இருக்க கூடாது இவங்களுக்கெல்லாம்.எப்போவும் வேலை வேலை தான்.கடவுளே!!எப்படியோ இன்னைக்கு சமாளிச்சுட்டேன்" என்று சொல்லி திரும்பினாள் சாரா,அங்கே நின்று கொண்டிருந்த கண்ணம்மா தன் பார்வையாலே "என்ன இது!!ஹ" என்று கேட்டு விட்டு சென்றாள் .சாரவும் அசடு வழிந்து கொண்டே, "சரி சரி சீக்கிரம் வேலை ஆகட்டும்" என்று நகர்ந்தாள் .
No comments:
Post a Comment